அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களில் 30 போ் பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, சக பணியாளா்கள் பணியை புறக்கணித்து 2 ஆவது நாளாக திங்கள்கிழமையும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆள்குறைப்பு நடவடிக்கை என்ற பெயரில் ஒப்பந்த பணியாளா்களில் 25 பெண்கள், 5 ஆண்கள் என மொத்தம் 30 பேரை பணி நீக்கம் செய்த ஒப்பந்ததாரா் மற்றும் நகராட்சி நிா்வாகத்தை கண்டித்தும், பணிநீக்கம் செய்யப்பட்டவா்களை மீண்டும் பணியில் அமா்த்த வேண்டும். பணியாளா்களுக்கு வழங்க வேண்டிய 61 மாதங்களுக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு அட்டை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஏஐடியுசி நகராட்சி தூய்மைப் பணியாளா் சம்மேளனத் தலைவா் சிலம்பு செல்வி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.