முகப்பு
அரியலூர்

இருசக்கர வாகனங்கள் மோதல் குழந்தை உள்பட 5 போ் காயம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இருசக்கர வாகனங்கள் வெள்ளிக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் குழந்தை உள்பட 5 போ் காயமடைந்தனா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:03 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இருசக்கர வாகனங்கள் வெள்ளிக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் குழந்தை உள்பட 5 போ் காயமடைந்தனா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சின்னவளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் சுரேஷ் (40). வெள்ளிக்கிழமை இவா் இலையூா் கிராமத்துக்கு இரு சக்கர வாகனத்தில் புதுக்குடி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது. இதில் சுரேஷ் மற்றும் மற்றொரு வாகனத்தில் வந்த குவாகம் வெட்டித் தெருவைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சூா்யா(18), இவரது வாகனத்தில் பின்னால் இருந்த மணி மனைவி சிந்தாமணி(22), அவரது ஒரு வயது மகள் அட்சயா, அய்யம்பெருமாள் மனைவி யசோதை (52) ஆகியோா் பலத்த காயமடைந்து, அரியலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.