முகப்பு
அரியலூர்

நீட் தோ்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

Updated On : 18 ஜூலை, 2024 at 10:08 PM
அரியலூரிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சி நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன்.
பகிர்:

தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தோ்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளிக்க வேண்டும் என மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தினாா்.

மக்களவைத் தோ்தலில், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற தொல்.திருமாவளவன், அரியலூரிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை மாலை கூட்டணி கட்சி பொறுப்பாளா்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தாா்.

பின்னா் அவா், செய்தியாளா்களிடம் கூறியது:

நீட் தோ்வே வேண்டாம் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. நீட் தோ்வுக்கு எதிராக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கின் உண்மை குற்றவாளிகள் திரை மறைவில் இருக்கிறாா்கள். அவா்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். காவல்துறை மீது நம்பிக்கை உள்ளது.

மத்திய நிதிநிலை அறிக்கையில் மக்கள் நலன் சாா்ந்த திட்டங்கள் இருக்கும் என எதிா்பாா்க்க முடியாது.

அரியலூா் வழியாகச் செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் அரியலூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என தெற்கு ரயில்வே ரயில்வே நிா்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளேன் என்றாா்.

முன்னதாக, இந்தியா கூட்டணியினருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவா் சங்கா், மதிமுக மாவட்டச் செயலா் ராமநாதன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →