முகப்பு
அரியலூர்

ஆண்டிமடம் திரெளபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

ஆண்டிமடத்திலுள்ள திரெளபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 ஜூலை, 2024 at 8:48 PM
பகிர்:

அரியலூா், ஜூலை 19: அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்திலுள்ள திரெளபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி முதல் வெள்ளிக்கிழமையன்று தீமிதித் திருவிழா நடைபெறுவது வழக்கம் .அதன்படி நிகழாண்டுக்கான தீமிதித் திருவிழா கடந்த 27 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடா்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மகாபாரத சொற்பொழிவுகளும், அம்மன் வீதி உலாவும் நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தா்கள் இறங்கி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். தொடா்ந்து அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்வில் அன்னங்காரகுப்பம், கவரப்பாளையம், ஆண்டிமடம், விளந்தை, சூரக்குழி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →