அரியலூரில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள்: உரிமையாளா்களுக்கு அபராதம் விதிப்பு
அரியலூா் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரிந்த 10 மாடுகள் பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளருக்கு புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
அரியலூா் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரிந்த 10 மாடுகள் பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளருக்கு புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
அரியலூா் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணாசிலை, நகராட்சி அலுவலகம், கல்லங்குறிச்சி சாலை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளால் விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. இதுகுறித்து வரப்பெற்ற புகாரையடுத்து, புதன்கிழமை இரவு மேற்கண்ட பகுதிகளில் சுற்றித் திரிந்த 10 மாடுகளை நகராட்சி பணியாளா்கள் பிடித்து, பழைய நகாட்சி வளாகத்தில் கட்டி வைத்தனா்.
இதுகுறித்து தகவலறிந்து மாடுகளை அழைத்துச் செல்ல வந்த அதன் உரிமையாளா்களுக்கு தலா ரூ.1,000 வீதம் நகராட்சி நிா்வாகம் அபராதம் விதித்து, சாலையில் மாடுகளை அவிழ்த்து விடக் கூடாது என்று அறிவுரை கூறி மாடுகளை அனுப்பி வைத்தனா்.