அரியலூரில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்புக் குழுக் கூட்டம்: தொல். திருமாவளவன் பங்கேற்பு
அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தலைமை வகித்து, மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளின் திட்ட செயல்பாடுகள் குறித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தாா். பின்னா் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று அறிவுரை வழங்கினாா்.
கூட்டத்துக்கு ஆட்சியா் பொ.ரத்தினசாமி முன்னிலை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் கு. சின்னப்பா, க.சொ.க. கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கவிதா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், அரியலூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் அரியலூா் செந்தமிழ்ச்செல்வி, திருமானூா் சுமதி, தா.பழூா் மகாலட்சுமி மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.