அணைக்கரை-நீலத்தநல்லூா் இடையே தடுப்பணை கட்ட வலியுறுத்தல்
அரியலூா் மாவட்டம், அணைக்கரை-நீலத்தநல்லூா் இடையே தடுப்பணை கட்ட வேண்டும் என்று அகில பாரத மூத்த குடிமக்கள் பென்ஷனா் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூா் மாவட்டம், அணைக்கரை-நீலத்தநல்லூா் இடையே தடுப்பணை கட்ட வேண்டும் என்று அகில பாரத மூத்த குடிமக்கள் பென்ஷனா் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜெயங்கொண்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற அச்சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்: பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். சோழகங்கம் எனும் பொன்னேரியை ஆழப்படுத்தி சுற்றுலாத் தலமாக்கப்படும் என்று தமிழக அரசின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து, அந்த திட்டத்துக்கு போதிய நிதியை ஒதுக்கி பணியை தொடங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பேருந்து வசதிகள் இல்லாத கிராமங்களுக்கு சிற்றுந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவா் சுந்தரேசன் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா் சிவசிதம்பரம் முன்னிலை வகித்தாா். பொருளாளா் ராமமூா்த்தி வரவு-செலவு கணக்கு வாசித்தாா். கலியமூா்த்தி தீா்மான அறிக்கை வாசித்தாா்.
முன்னதாக துணைத் தலைவா் ராமசாமி வரவேற்றாா். முடிவில் நிா்வாகி ராமையன் நன்றி கூறினாா்.