முகப்பு
அரியலூர்

அனுமதியின்றி செயல்பட்டு வந்த பட்டாசு தயாரிப்பு கூடத்துக்கு ‘சீல்’

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த பட்டாசு தயாரிப்பு கூடத்துக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டது

Updated On : 15 அக்டோபர், 2024 at 9:04 PM
திருமானூா் அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த பட்டாசு தயாரிப்பு கூடத்துக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைத்த அதிகாரி.
பகிர்:

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த பட்டாசு தயாரிப்பு கூடத்துக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டது

திருமானூரை அடுத்த திருவெங்கனூரைச் சோ்ந்தவா் அய்யாரப்பன். இவா், அப்பகுதி வயல் வெளியிலுள்ள தனது சொந்தமான ஒரு கட்டடத்தில் அனுமதியின்றி நாட்டு வெடி மற்றும் பட்டாசுகளை தயாரித்து, விற்பனை செய்து வருவதாக அரியலூா் கோட்டாட்சியா் மற்றும் திருமானூா் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், செவ்வாய்க்கிழமை திருமானூா் காவல் துறையினரும், வருவாய் துறையினரும் அந்த இடத்துக்குச் சென்று சோதனையிட்டனா். அப்போது, மூட்டை மூட்டையாக பல்வேறு ரகங்களில் பட்டாசுகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பட்டாசுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், பட்டாசு தயாரிப்பு கூடத்துக்கு ‘சீல்’ வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து போலீஸாரும், வருவாய் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.