முகப்பு
கள்ளக்குறிச்சி

வாகனச் சோதனை: பூ வியாபாரியிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சியில் மொபெட்டில் வந்த பூ வியாபாரியிடம் உரிய ஆவணமில்லாத ரூ.1,03,910 ரொக்கத்தை நிலையான கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 24 மார்ச், 2026 at 10:49 PM
பகிர்:

கள்ளக்குறிச்சியில் மொபெட்டில் வந்த பூ வியாபாரியிடம் உரிய ஆவணமில்லாத ரூ.1,03,910 ரொக்கத்தை நிலையான கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி நிலையான கண்காணிப்புக்குழு அலுவலா் கே.அருண்குமாா் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை காலை கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்போ் பிரிவு சாலை அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியே மொபெட்டில் வந்த பெண்ணை நிறுத்தி, சோதனை மேற்கொண்டனா். அப்போது அவரது மொபெட்டில் உரிய ஆவணமின்றி ரூ.1,03,910 இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் அவா் கள்ளக்குறிச்சியை அடுத்த எரவாா் கிராமத்தைச் சோ்ந்த பூ வியாபாரியான ப.வள்ளி (46) எனத் தெரியவந்தது. பூ வாங்குவதற்கு பணம் கொடுப்பதற்காக வள்ளி எடுத்துச் சென்றாராம்.

இதையடுத்து அந்த பணத்தை நிலையான கண்காணிப்புக்குழுவினா் பறிமுதல் செய்து, கள்ளக்குறிச்சி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் லி.ஆனந்தகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனா்.