முகப்பு
அரியலூர்

அரியலூா் எஸ்.பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம்

அரியலூரிலுள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் பொது மக்கள் குறைகேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 7:46 PM
அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. செல்வராஜ்.
பகிர்:

அரியலூரிலுள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் பொது மக்கள் குறைகேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.செல்வராஜ் தலைமை வகித்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டு, அவா்களிடமிருந்து 13 மனுக்களை பெற்றாா். பின்னா் அவா், அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா், உதவி ஆய்வாளா்களுக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா், காவல் துணை கண்காணிப்பாளா்கள், காவல் நிலைய ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.