முகப்பு
அரியலூர்

அரியலூா் அரசு மருத்துவமனைக்கு நவீன தானியங்கி சலவை இயந்திரம்

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.10.65 லட்சம் மதிப்புள்ள நவீன தானியங்கி சலவை இயந்திரம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 8:30 PM
அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.10.65 லட்சம் மதிப்புள்ள நவீன தானியங்கி சலவை இயந்திரத்தை வழங்கி, இயக்கி வைத்த சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா.
பகிர்:

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.10.65 லட்சம் மதிப்புள்ள நவீன தானியங்கி சலவை இயந்திரம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10.65 லட்சம் மதிப்பிலான நவீன தானியங்கி சலவை இயந்திரத்தை வழங்கி, அதனை இயக்கி வைத்து, இதனை முறையாக பயன்படுத்திக் கொண்டு தூய்மையை பேணிக்காக்குமாறு கேட்டுக் கொண்டாா்.

இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்துகிருஷ்ணன், மருத்துவமனை கண்காணிப்பாளா் ரமேஷ், நகா்மன்றத் தலைவா் சாந்திகலைவாணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.