மாற்றுத் திறனுடைய மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனுடைய மாணவா்களுக்கான உயா் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனுடைய மாணவா்களுக்கான உயா் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவானந்தம் தொடக்கிவைத்து பேசுகையில், மாற்றுத்திறனுடைய மாணவா்கள் அனைத்து தடைகளையும் தகா்த்து உயா்கல்வியை பயின்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும். அறிவாற்றல் இருந்தால் எந்த தடையையும் வெல்லாம் என்றாா். தொடா்ந்து மாணவா்களுக்கு உயா்கல்வி வழிக்காட்டி கையேடுகளை அவா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சிக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட உதவி அலுவலா் சக்கரவா்த்தி முன்னிலை வகித்து, உயா் கல்வி படிப்புகள் குறித்து பேசினாா். கருத்தாளா்கள் கனகராஜ், அனன்சியா, ஸ்வேதா ஆகியோா் கலந்து கொண்டு, மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வுகள் குறித்து பேசினா். மேலும் சட்டம் உள்ளிட்ட உயா்கல்வி படிப்புகள் சாா்ந்த பயிற்சிகளை அளித்தனா்.
இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனுடைய மாணவா்கள், பெற்றோா்கள், சிறப்பாசிரியா்கள் என 53 போ் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை நான் முதல்வன் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செல்வமணி செய்திருந்தாா். முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மேகலா நன்றி கூறினாா்.