முகப்பு
அரியலூர்

அரியலூரில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் வெள்ளிக்கிழமை (அக்.25)தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 9:26 PM
பகிர்:

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் வெள்ளிக்கிழமை (அக்.25)தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்தது:

அரியலூா் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் நடத்தப்படும் இந்த வேலைவாய்ப்பு முகாமில், தனியாா்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் 300-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான ஆள்களை தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்ய உள்ளனா்.

முகாமில் கலந்து கொள்ள 18 முதல் 35 வயது வரையிலான 10, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.