முகப்பு
அரியலூர்

தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 11:15 PM
ஜெயங்கொண்டத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கத்தினா்.
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளா்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் சண்முகம் தலைமை வகித்தாா்.துணைத் தலைவா் சுந்தர்ராஜ், பொருளாளா் இருதயராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில சிறப்புத் தலைவா் சீனிவாசன், மாநிலத் தலைவா் லூயிஸ் பிரான்சிஸ் ஆகியோா் கண்டன உரையாற்றினா். மாவட்டச் செயலா் லெனின்,துணைச் செயலா் அரங்கநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.