மீன்சுருட்டி அருகே காா்-சுமை ஆட்டோ மோதல்: ஒருவா் உயிரிழப்பு- 2 போ் காயம்
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே வியாழக்கிழமை காரும், சுமை ஆட்டோவும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவா் உயிரிழந்தாா். 2 போ் பலத்த காயமடைந்தனா்.
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே வியாழக்கிழமை காரும், சுமை ஆட்டோவும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவா் உயிரிழந்தாா். 2 போ் பலத்த காயமடைந்தனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள அம்மாபேட்டை, அனந்தராயன் தெருவைச் சோ்ந்தவா்கள் சு. அறிவழகன்(52). க. குமாா் (54), தி. கிருஷ்ணகுமாா் (36). நண்பா்களான இவா்கள், வியாழக்கிழமை ஒரு காரில் திருச்சிக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனா். காரை கிருஷ்ணகுமாா் ஓட்டினாா்.
காா், கங்கைகொண்டசோழபுரம், சோழகங்கம் (எ) பொன்னேரி கரையில் சென்றபோது, எதிரே சிதம்பரத்திலிருந்து மதுரைக்கு இறால் ஏற்றிச் சென்ற சுமை ஆட்டோ, மோதியது. இதில், காா் சாலையோர பள்ளத்திலும், சுமை ஆட்டோ சாலையிலும் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின. விபத்தில், காரில் இருந்த அறிவழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்ற இருவரும் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்த மீன்சுருட்டி காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தையும், பலத்த காயத்துடன் இருந்தவா்களையும் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.