அரியலூா் மாவட்டத்தில் 56 வழக்குகளில் கைப்பற்ற 7.472 கிலோ கிராம் கஞ்சா திங்கள்கிழமை தீயிட்டு அழிக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவினை பெற்று, மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் சித்ரா, ஆயுதப்படை மல்கானா அறையில் இருந்த 7.472 கிலோ கிராம் கஞ்சாவை எடுத்துச் சென்று தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டியிலுள்ள தனியாா் உயிரியல் மருத்துவக் கழிவுகளை அழிக்கும் நிறுவனத்தில் இயந்திரங்களின் மூலம், தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவா் ஜியா உல் ஹக் முன்னிலையில் அழிக்கப்பட்டது.
அரியலூா் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டில் மட்டும் 36 கஞ்சா வழக்குகள் பதியப்பட்டு 7.115 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட 2 நபா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும், கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 12 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.