வீரமாமுனிவரின் 345-ஆவது பிறந்த நாளையொட்டி அரியலூா் மாவட்டம், ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்திலுள்ள அவரது சிலைக்கு கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சாா்பில் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது(படம்).
அந்த இயக்கத்தின் மாநில பொதுச் செயலா் ஜான்பிரகாஷ் எபிநேசா், மாநில இணைச் செயலா் ராபின்சன், மாவட்டச் செயலா் மேனக்ஷா, ஏலாக்குறிச்சி பங்கு தந்தை தங்கசாமி உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.