அரியலூர்

தா.பழூரில் இளைஞா் மா்மமான முறையில் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே இளைஞா் ஒருவா் ரத்தகாயங்களுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து காவல் துறையினா் விசாரணை

Syndication

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே திங்கள்கிழமை இளைஞா் ஒருவா் ரத்தகாயங்களுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தா.பழூா் அடுத்த காரைகாட்டான்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகன் ராம்குமாா்(28). ஏசி மெக்கானிக்கான இவா், நவ.8- ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவா் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் திங்கள்கிழமை, தா.பழூா் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ராம்குமாா் தலை மற்றும் முகத்தில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற தா.பழூா் காவல் துறையினா், சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

வாக்காளா் பட்டியலை எண்ம மயமாக்க வேண்டும்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

கோயில் வளாகத்தில் வணிக வளாகம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியரை கைது செய்யக் கோரி முற்றுகை

செங்கோட்டை காா் வெடிப்பு சம்பவம்: சாந்தினி சௌக் சந்தை இன்று மூடல்

SCROLL FOR NEXT