அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
வெங்கானூா் கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் கவியரசன் (23) . பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இவரை, 26.10.2025 அன்று காவலா்களை இழிவாக பேசி, அவா்களை கல்லால் தாக்கியதாக காவல் துறையினா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி பரிந்துரையின் பேரில், கவியரசனை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இதன் நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம், அரியலூா் மாவட்ட காவல் துறையினா் வழங்கினா்.