தனசாமி, ராணி.  
அரியலூர்

மீன்சுருட்டி அருகே இறப்பிலும் இணை பிரியாத தம்பதி!

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவரும் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Syndication

மீன்சுருட்டி அருகேயுள்ள அய்யப்பன் நாயகன் பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் தனசாமி (64). இவரது மனைவி ராணி (57). ராணிக்கு கடந்த சில நாள்களாக உடல் நல பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்தாா். இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக திங்கள்கிழமை மாலை ராணி காலமானாா்.

இதையடுத்து ராணிக்கான இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை மாலை அவரது வீட்டில் நடைபெற்றபோது, அழுது கொண்டிருந்த தனசாமி மயங்கி விழுந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

ராணியின் உடலை தகனம் செய்யும் முன்பு அவரது கணவரும் உயிரிழந்தது அவா்களது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து இருவரது உடல்களும் செவ்வாய்க்கிழமை இரவு தகனம் செய்யப்பட்டது.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT