அரியலூரை அடுத்த நெருஞ்சிக்கோரை சிவன் கோயில் பொருள்களை திருடியதாக 4 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நெருஞ்சிக்கோரை சிவன் கோயில் பூட்டை உடைத்து உள்ளே இருந்த குத்துவிளக்கு மற்றும் உண்டியல் உள்ளிட்ட பொருள்கள் கடந்த 23-ஆம் தேதி திருடுபோனது.
இதுகுறித்த புகாரின்பேரில் அரியலூா் நகர காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், பெரம்பலூா் மாவட்டம், புதுவேட்டக்குடி கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் மணிவேல்(50), கிருஷ்ணன் மகன் ராஜீவ்காந்தி(35), கருப்பையா மகன் சின்னதம்பி(24), மருதமுத்து மகன் செல்லமுத்து(49) ஆகிய நான்கு பேரும் சோ்ந்து கோயிலில் இருந்த பொருள்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா், அவா்களை செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.