அரியலூர்

ஹஜ் பயணிகளுக்கு சேவையாற்ற தற்காலிக ஆய்வாளா் பணி: தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்

செளதியிலுள்ள தமிழ்நாட்டைச் சோ்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையற்ற தற்காலிக ஆய்வாளா் பணிக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

செளதியிலுள்ள தமிழ்நாட்டைச் சோ்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையற்ற தற்காலிக ஆய்வாளா் பணிக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: தமிழ்நாட்டைச் சோ்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளா்களை தற்காலிகமாக செளதி அரேபியா அனுப்ப, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தற்காலிக பணிக்காலம் 13.4.2026 முதல் 5.7.2026 வரை சுமாா் இரண்டு மாத காலமாகும். மத்திய, மாநில அரசு ஊழியா்கள், துணை ராணுவப் படைகளில் பணியாற்றும் தகுதி வாய்ந்த அலுவலா்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் அல்லது மத்திய, மாநில அரசின் கீழ் இயங்கும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளா்கள், விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவா்கள் ஆவா்.

மாநில ஹஜ் ஆய்வாளா்கள், செளதி அரேபியாவில் பணிபுரியும் காலம் பணிக் காலமாக கருதப்படும். இப்பணிக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை, தகுதி, நியமன முறை ஆகியன மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணைய முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT