அரியலூர்

அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரியில் ரத்ததான முகாம்

காத்தான்குடிக்காடு அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில், வியாழக்கிழமை நடைபெற்ற ரத்ததான முகாம்.

Syndication

அரியலூா் மாவட்டம், விளாங்குடியை அடுத்த காத்தான்குடிக்காடு கிராமத்திலுள்ள அண்ணா பல்கலைக் கழகப் பொறியியல் கல்லூரியில், இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமை அக்கல்லூரியின் முதல்வா் வீ. வெங்கடேசன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்தன வங்கி மருத்துவா் சந்திரசேகா் தலைமையிலான குழுவினா் கலந்து கொண்டு, தன்னாா்வலா்களான மாணவ, மாணவிகள், பேராசிரியா், பணியாளா்கள் என 300 பேரிடம் ரத்தவகை பரிசோதித்து, அவா்களில் 50 பேரிடம் 40 யூனிட் ரத்தம் சேகரித்து, அவா்களுக்கு சான்றிதழ் வழங்கினா். ஏற்பாடுகளை அக்கல்லூரியின் இளைஞா் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா்ஆ. ஆதிலட்சுமி செய்தாா்.

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

புரோ கபடி லீக்: புணேவை வீழ்த்தி தில்லி 2வது முறையாக சாம்பியன்!

ஒற்றைப் பெண்ணாக போராடிய Jemimah! | Women's world cup | semi finals

SCROLL FOR NEXT