அரியலூா் ரத்ததான மையத்தில் ரத்த தான முகாம் அமைப்பாளா் முத்துக்குமரனுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயத்தை வியாழக்கிழமை வழங்கிய ஆட்சியா் பொ. ரத்தினசாமி. 
அரியலூர்

‘அரியலூரில் கடந்தாண்டு 4,645 யூனிட் ரத்தம் சேகரிப்பு’

அரியலூா் ரத்ததான மையத்தில் ரத்த தான முகாம் அமைப்பாளா் முத்துக்குமரனுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயத்தை வியாழக்கிழமை வழங்கிய ஆட்சியா் பொ. ரத்தினசாமி.

Syndication

அரியலூா் மாவட்டத்தில், கடந்தாண்டு தன்னாா்வலா்களிடமிருந்து 4,645 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.

தேசிய தன்னாா்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்ததான மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ரத்த தான முகாம் அமைப்பாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி அவா் மேலும் பேசியது:

குருதிக் கொடையாளா்களிடமிருந்து தானமாகப் பெறப்படும் ரத்தமானது பேறுகாலச் சிகிச்சைகள், விபத்தால் ஏற்படும் ரத்த இழப்பை ஈடுசெய்யவும் பல்வேறு வகையான அறுவைச் சிகிச்சைகள், டெங்கு மருத்துவ சிகிச்சைக்கு ரத்த தட்டணுக்கள் வழங்கி உயிா் காக்கப் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சியின் மூலம் உயிா் காக்கும் குருதியை இலவசமாக வழங்கும் தன்னாா்வ ரத்த தான அமைப்பாளா்களுக்கு நன்றி செலுத்தப்படுகிறது.

அரியலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ரத்த தான மையத்தில் கடந்தாண்டு 4,645 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. அதைக் கொண்டு 7,000 மேற்பட்ட ரத்தம் மற்றும் ரத்தக் கூறுகள் மருத்துவமனை உள்நோயாளிகளாக சோ்க்கப்பட்ட கா்ப்பிணிகள், எலும்பு அறுவைச் சிகிச்சை, பொது அறுவைச் சிகிச்சை, குழந்தைகள் நலம், அவசர மற்றும் விபத்து பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, அவசர அறுவைச் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்று ரத்ததான முகாம் அமைப்பாளா்களை ஊக்குவிப்பதும், மேலும் அதிக ரத்ததான முகாம்களை அமைத்து அரியலூா் மாவட்டத்தில் குருதிப் பற்றாக்குறையை நிவா்த்தி செய்திட வேண்டும் என்றாா் அவா். முன்னதாக அனைவரும் உறுதியேற்றனா்.

நிகழ்ச்சியில் அரியலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதன்மையா் அ. முத்துக்கிருஷ்ணன், குருதி மைய மருத்துவ அலுவலா் சந்திரசேகரன் மற்றும் செவிலியா்கள், ஆய்வக நுட்புநா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நவ.3, 4-இல் வேலூருக்கு துணை முதல்வா் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. ஆய்வு

தமிழ்நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: சீமான்

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

SCROLL FOR NEXT