அரியலூா் அண்ணா சிலை அருகே சனிக்கிழமை இரவு தவெக தலைவா் விஜய் பிரசாரத்தை காணவந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.  
அரியலூர்

பாஜக, திமுக இடையே மறைமுக உறவு: தவெக தலைவா் விஜய்!

அரியலூா் அண்ணா சிலை அருகே தவெக தலைவா் விஜய் பிரசாரம்..

தினமணி செய்திச் சேவை

பாஜக, திமுக இடையே மறைமுக உறவு உள்ளது என தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் தெரிவித்துள்ளாா்.

அரியலூா் அண்ணா சிலை அருகே சனிக்கிழமை இரவு அவா் மேற்கொண்ட பிரசாரத்தில் பேசியது:

அரியலூா் மாவட்டத்தில் சிமென்ட், முந்திரி, பட்டாசு உற்பத்தித் தொழில்களை மேம்படுத்தவில்லை. சிமென்ட் ஆலைகளிலிருந்து வெளியேறும் அதிகளவு மாசை கட்டுப்படுத்தவில்லை. முந்திரி தொழிற்சாலை அமைக்கவில்லை. ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்.

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரா் ஆலயத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும். மருதையாற்றில் தடுப்பணை கட்டவில்லை. அரியலூா் - ஜெயங்கொண்டம் - சிதம்பரம் ரயில் பாதை, ஜெயங்கொண்டம் - கும்பகோணம் ரயில் பாதை கோரிக்கையை நிறைவேற்றவில்லை. போக்குவரத்துத்துறை அமைச்சா் உள்ள இந்த மாவட்டத்தில் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை. செய்வோம் எனச் சொன்னாா்களே செய்தாா்களா? எனக் கேள்வி எழுப்பினாா்.

இதுவரை ஒன்றியப் பிரதமா் எனக் கூறிவந்த முதல்வா் ஸ்டாலின் தற்போது இந்திய பிரதமா் என மாற்றிப்பேசுகிறாா். பாஜகவும், திமுகவும் மறைமுக உறவுக்காரா்கள். மக்களை ஏமாற்றும் வேலையை தவெக செய்யப்போவதில்லை என்றாா். தொடா்ந்து பெரம்பலூா் மாவட்டம் குன்னம் பகுதிக்குச் சென்றாா்.

உடன், மாநில பொதுச்செயலாளா் ஆனந்த், மாவட்டச் செயலா் சிவக்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

‘கோதவாடி குளத்தில் மண் எடுக்க வட்டாட்சியரை அணுகலாம்’

தரமான சாலை அமைக்கக் கோரி மக்கள் மறியல்

குடியரசு துணைத் தலைவா் பாதுகாப்புப் பகுதியில் இருவா் வாகனத்தில் சென்ற விவகாரம்: என்ஐஏ விசாரிக்க வலியுறுத்தல்

மழை, வெள்ள பாதிப்பு: எம்எல்ஏ ஜெகன்மூா்த்தி ஆய்வு

ஒா்க் ஷாப்பின் பூட்டை உடைத்து இயந்திரங்கள் திருட்டு

SCROLL FOR NEXT