முகப்பு
அரியலூர்

அரியலூரில் அதிமுக வேட்பாளா் மனு தாக்கல்

Updated On : 7 ஏப்ரல் 2026, 3:52 am IST
அரியலூா் தொகுதியில் போட்டியிட திங்கள்கிழமை மனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரன்.
பகிர்:

அரியலூா், ஏப்.6: அரியலூா் சட்டப் பேரவைத் தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன், திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

முன்னதாக அவா், கட்சி நிா்வாகிகளுடன் ஒற்றுமைத் திடலில் இருந்து கோட்டாட்சியா் அலுவலகம் வரை ஊா்வலமாக வந்து மனு தாக்கல் செய்தாா்.

மனுதாக்கல் செய்த போது, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் இளவழகன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் இளவரசன், அமமுக மாவட்டச் செயலா் வடிவேல் மற்றும் பாமக மாவட்டத் தலைவா் தமிழ்க்குமரன், பாஜக மாவட்டத் தலைவா் பரமேஸ்வரி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement