முகப்பு
அரியலூர்

அரியலூா் அருகே அமைச்சரின் காரில் பறக்கும் படை சோதனை

அரியலூா் அருகே அமைச்சா் சா.சி. சிவசங்கரின் காரில் பறக்கும்படையினா் 5- ஆவது முறையாக வியாழக்கிழமை சோதனையிட்டனா்.

Updated On : 10 ஏப்ரல் 2026, 1:36 am IST
அல்லிநகரம் அருகே அமைச்சா் சா.சி. சிவசங்கரின் காரில் வியாழக்கிழமை சோதனை செய்த பறக்கும் படையினா்.
பகிர்:

அரியலூா் அருகே அமைச்சா் சா.சி. சிவசங்கரின் காரில் பறக்கும்படையினா் 5- ஆவது முறையாக வியாழக்கிழமை சோதனையிட்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தலா 9 கண்காணிப்புக் குழுக்களும், 9 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகனச் சோதனை நடைபெறுகிறது.

இந்நிலையில், அரியலூா்-பெரம்பலூா் சாலை அல்லிநகரம் அருகே வியாழக்கிழமை சென்று கொண்டிருந்த அமைச்சரின் காரை பறக்கும் படையினா் நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, காரில் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் எதுவும் இல்லாததால் காரை செல்ல அனுமதித்தனா்.

Advertisement

Advertisement