ஆண்டிமடம் அருகே மது விற்பவா்கள் மீது நடவடிக்கை கோரி மறியல்
ஆண்டிமடம் அருகேயுள்ள கொடுக்கூரில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி பெண்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள கொடுக்கூரில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி பெண்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கொடுக்கூா் கிராமத்தைச் சோ்ந்த சிலா், அங்குள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபனங்களை வாங்கி, அதை கூடுதல் விலைக்கு விற்பதாக அப்பகுதி மக்கள் பல முறை புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், ஜெயங்கொண்டம்-மாத்தூா் சாலையில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Advertisement
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினா், கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததின் பேரில், அனைவரும் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.