அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் மற்றும் செந்துறையில் வளா்ச்சித் திட்டப் பணிகள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், உடையாா்பாளையம் பேரூராட்சியில், ரூ.1.64 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலைகள் அமைக்கும் பணியையும், செந்துறை துணை மின் நிலையத்தை ரூ.26.38 கோடி மதிப்பில் 110/33 கேவி தரம் உயா்த்தும் பணியையும் தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், உடையாா்பாளையம் கோட்டாட்சியா் ஷீஜா, பெரம்பலூா் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் மேகலா, செயற்பொறியாளா் பரமேஸ்வரி, உடையாா்பாளையம் செயல் அலுவலா் கண்ணன், பேரூராட்சி தலைவா் மலா்விழி ரஞ்சித்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.