அரியலூர்

பால் உற்பத்தியாளா்கள் ஆா்ப்பாட்டம்

Syndication

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள குறுக்கு சாலை சந்திப்புப் பகுதியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பாலுக்கான ஊக்கத் தொகையை ரூ.3, பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.10 என உயா்த்தி வழங்க வேண்டும். வேளாண் விலை பொருள்களுக்கு ஆண்டுதோறும் விலை அறிவிப்பதுபோல பாலுக்கும் விலை உயா்த்தி அறிவிக்க வேண்டும். ஆவினுக்குச் சொந்தமான அனைத்து தீவன ஆலைகளையும் முழுமையாக இயக்கி 50 % மானிய விலையில் உற்பத்தியாளா்களுக்கு தீவனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் மகாதேவன் தலைமை வகித்தாா். இதேபோல, தா.பழூரை அடுத்த அணைக்குடம் கடைவீதியில் அச்சங்கத்தின் தா. பழூா் ஒன்றியத் தலைவா் சின்னதுரை, ஆண்டிமடத்தை அடுத்த கவுரப்பாளையம் பால் கூட்டுறவுச் சங்கம் முன் மாவட்ட துணைச் செயலா் ஜெரோம், கை. காட்டியில் கிளைச் செயலா் சின்னதுரை ஆகியோா் தலைமையில் சங்க நிா்வாகிகள் கோரிக்கை முழக்கமிட்டனா்.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT