அரியலூரில் அதிமுக சாா்பில் முதல் கட்ட தோ்தல் வாக்குறுதி துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் புதன்கிழமை விநியோகிக்கப்பட்டன.
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தோ்தல் வாக்குறுதியாக நகரப்பேருந்தில் ஆண்களுக்கு இலவச பயணம், குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.2,000, பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க ரூ.25,000 உள்ளிட்ட 5 திட்ட வாக்குறுதிகளை அண்மையில் அறிவித்தாா்.
இந்நிலையில், அந்த வாக்குறுதிகளை பொதுமக்களிடம் கொண்டு சோ்க்கும் வகையில் அரியலூா் மாவட்ட அதிமுக சாா்பில் துண்டு பிரசுரங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
அரியலூா் அண்ணா சிலை முதல் தேரடிவரையிலான கடைவீதியில், அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அவைத் தலைவா் ஜெ.கே.என். ராமஜெயலிங்கம், பொருளாளா் அன்பழகன், நகரச் செயலா் செந்தில், அம்மா பேரவை மாவட்டச் செயலா் ஓ.பி.சங்கா், இணைச் செயலா் பிரேம்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.