பரணிபார்க் பள்ளி 100% தேர்ச்ச
கரூர் பரணிபார்க் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.
கரூர் பரணிபார்க் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.
இந்தப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வை 473 மாணவ, மாணவிகள் எழுதினர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இந்தப் பள்ளியின் மாணவி எம். மிருணாளினி 1,185 மதிப்பெண் பெற்று தமிழ் அல்லாத பிறமொழியை முதல் மொழியாகக் கொண்டு படித்தவர்களில் மாவட்ட அளவில் முதலிடத்தைப் பெற்றார். பிரஞ்சு பாடத்தில் 198 மதிப்பெண்கள் பெற்று மாநில முதல் மதிப்பெண்ணையும் பெற்றுள்ளார்.
தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 27 பேர் பல்வேறு பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று மாவட்டத்திலேயே, 200-க்கு 200 மதிப்பெண் பெற்ற அதிகம் மாணவர்களை கொண்ட பள்ளி என்ற சாதனையையும் படைத்துள்ளனர்.
Advertisement
Advertisement
1,150 மதிப்பெண்ணுக்கு மேல் 28 பேர், 1,100 மதிப்பெண்ணுக்கு மேல் 102 பேர், 1,000 மதிப்பெண்ணுக்கு மேல் 238 பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழா வெள்ளிக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளித் தாளாளர் எஸ். மோகனரங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி மோகனரங்கன் முன்னிலை வகித்தார்.
சாதனை புரிந்த மாணவர்களுக்கும், சாதனைக்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் முதன்மை முதல்வர் டாக்டர் சொ. ராமசுப்பிரமணியன், மெட்ரிக் பள்ளி முதல்வர் சேகர், பரணிபார்க் பள்ளி தேர்வு கண்காணிப்பாளர் ரகுநாதன், மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் முத்துக்குமரன், விடுதி துணை முதல்வர் கணேஷ் சுப்பிரமணியன் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும், பள்ளித் தாளாளர் எஸ். மோகனரங்கன் பதக்கங்கள் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.
மேலும், மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவி எம். மிருணாளினியை கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெ. சாந்தமூர்த்தி நேரில் அழைத்து பரிசு வழங்கிப் பாராட்டினார்.