கரூர்

ரயில் நிலைய முற்றுகை: 16 பேர் கைது

DIN

கரூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மனிதநேய ஜனநாயக கட்சியினர் 16 பேரை போலீஸார்  கைது செய்தனர்.
 பாபர் மசூதி நிலத்தை இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி முஸ்லிம்களிடம் ஒப்படைக்கக் கோரி மனிதநேய ஜனநாயக கட்சியினர் கட்சியின் மாவட்டச்  செயலர் எஸ். ஷேக் இஸ்மாயில்
தலைமையில் கரூர் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்த ரத்னம் சாலையில இருந்து ஊர்வலமாகச் சென்று ரயில் நிலைய நுழைவாயில் பகுதியில் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பின்னர் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீஸார் தடுப்பு அமைத்து முன்பாகவே தடுத்து நிறுத்தியதால் அவர்கள் மீண்டும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
மாவட்ட பொருளாளர் பி. சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார். 
மாநில மருத்துவ அணி செயலர் எம்.எம். பாஷா, துணை செயலர்கள் எம். ஜாகிர்உசேன், எம். ஷாஜஹான், வினிஸ் ராஜா ரபி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் ரயில் நிலையத்தை முற்றுகையிட
முயன்ற மனிதநேய ஜனநாயக கட்சியினர் 16 பேரை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட கரூர் நகர போலீஸார் கைது செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகாலாந்தில் 3-ஆவது நாளாக கடையடைப்பு: பொருள்கள் வாங்க அஸ்ஸாம் செல்லும் மக்கள்

செஸ் வீரா் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல்: பிரதமர் மோடி

திருச்செங்கோடு தோ்த் திருவிழாவுக்கு கொடி சேலை அளிப்பு

SCROLL FOR NEXT