கரூர்

மணல் குவாரிகளில் ஆன் லைனில் மணல் விற்பனை தொடக்கம்

DIN

கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் ஆன் லைனில் மணல் விற்பனையை ஆட்சியர் கு.கோவிந்தராஜ் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
கரூர் மாவட்டத்தில் மாயனூர், சிந்திலவாடி ஆகிய பகுதிகளில் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குவாரிகளில் சனிக்கிழமை ஆட்சியர் கு.கோவிந்தராஜ் ஆன்லைனில் மணல் விற்பனையை தொடங்கி வைத்துப் பேசியது:
தமிழக முதல்வர் அரசு மணல் குவாரிகளில் இருந்து பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மணல் உரிய முறையில் கிடைத்திடவும், மணல் ஏற்றுவதற்கான கால விரயத்தைத் தடுக்கும் வகையிலும் ஆன் லைன் மூலம் விற்பனையைத் தொடங்கி வைத்துள்ளது. அதன்படி கரூர்மாவட்டத்தில் இயங்கி வரும் மாயனூர், சிந்திலவாடி ஆகிய மணல் குவாரிகளில் இருந்து இன்று முதல் ஆன் லைன் மூலம் மணல் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குறைந்த விலையில் மணல் கிடைப்பதோடு போக்குவரத்து நெரிசலும் இனி இல்லாத நிலை ஏற்படும் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே.இராஜசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், காவிரி ஆற்று பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன், கோட்டாட்சியர்கள் பாலசுப்ரமணியன், விமல்ராஜ், குளித்தலை துணைக் காவல் கண்காணிப்பாளர் முத்துகருப்பன், உதவி செயற்பொறியாளர் குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT