கரூர்

லோக்ஜனசக்தி கட்சியின் கொள்கை விளக்கக் கூட்டம்

DIN

க.பரமத்தி ஒன்றிய லோக் ஜனசக்தி கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் மற்றும் கொடியேற்று விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
க.பரமத்தியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு, மேற்கு மாவட்டத்  தலைவர் முன்னூர் ஆறுமுகம்  தலைமை வகித்தார். மேற்கு மாவட்டச் செயலாளர் மணியன் வரேவற்றார்.
கூட்டத்தில், கட்சிக் கொடியேற்றி வைத்து மாநிலத் தலைவர் ச. வித்தியாதரன் பேசுகையில், கரூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் பஞ்சமி நிலங்கள் தனியார்வசம் உள்ளன. அரசு அவற்றை கையகப்படுத்தி வீடு இல்லாத ஏழைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய தலைவர் மற்றும் மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் ஏழை, எளிய மக்கள் பல்வேறு வகையில் உதவிகளைப் பெற நாடாளுமன்றத்தில் குரல்கொடுத்தவர் என்றார்.
மாநிலப் பொதுச் செயலாளர்கள் ஊட்டி சுப்பிரமணியம், பிரபாகர், தலைமைப் பொதுச் செயலாளர் ஜனார்தனன், மாநிலப் பொருளாளர் விஜயகுமார், மாவட்ட துணைத் தலைவர் விசுவை சுந்தரம், ஒன்றியத் தலைவர் வி.கே. மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

SCROLL FOR NEXT