கரூர்

அரசு கலைக்கல்லூரியில் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்

DIN

கரூர் அரசு கலைக்கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.
கல்லூரியின் விண்ணப்பம் விநியோகப் பணியை தொடங்கி வைத்து கல்லூரியின் முதல்வர் ராஜேந்திரன் கூறியதாவது:
தமிழகத்தில் ஏ கிரேடு அந்தஸ்து பெற்ற எங்கள் கல்லூரியில் தற்போது முதுகலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி திங்கள் கிழமை தொடங்கியுள்ளது. தாவரவியல், வேதியியல், வணிகவியல், பொருளாதாரவியல், ஆங்கிலம், வரலாறு, கணிதம், தமிழ், விலங்கியல் உள்ளிட்ட முதுகலை படிப்புகளுக்கு மொத்தம் உள்ள 377 இடங்களுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகிறது. வரும் 30 ஆம் தேதி வரை விண்ணப்பம் விநியோகிக்கப்படும்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வழங்குவதற்கும் வரும் 30-ஆம் தேதி கடைசி. இதையடுத்து ஜூலை 5 ஆம் தேதி மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வு நடத்தி அதன்மூலம் படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்படும் என்றார்.நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

SCROLL FOR NEXT