பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற இளைஞர் கைது
க.பரமத்தி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயின் பறிக்க முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
க.பரமத்தி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயின் பறிக்க முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
க.பரமத்தியை அடுத்த தொப்பம்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை மதியம் அப்பகுதியைச் சேர்ந்த பிச்சைமுத்து மனைவி சுதா (40), ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் வழிகேட்பது போல் சுதாவிடம் பேச்சுக் கொடுத்தார். அப்போது, திடீரென சுதாவின் கழுத்தில் கிடந்த தாலிச் செயினை அந்த இளைஞர் பறிக்க முயன்றார். சுதாவின் அலறல் சப்தத்தை கேட்ட அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, அந்த இளைஞரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர், அவரை தென்னிலை போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர், வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த ராஜ் மகன் சிவசக்தி (32) என்பது தெரியவந்தது. இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளர் பரமேஸ்வரன் வழக்குப்பதிந்து, சிவசக்தியை கைது செய்தார்.