விபத்தில் இறந்த அதிமுக நிர்வாகி குடும்பத்தினருக்கு நிதியுதவி
குளித்தலை அருகே விபத்தில் உயிரிழந்த அதிமுக நிர்வாகியின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புதன்கிழமை வழங்கினார்.
குளித்தலை அருகே விபத்தில் உயிரிழந்த அதிமுக நிர்வாகியின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புதன்கிழமை வழங்கினார்.
கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த கீழவெளியூரைச் சேர்ந்தவர் ஆனந்தன் (40). அதிமுகவின் கிளைச் செயலாளரான இவர், நாகனூர் அருகே அண்மையில் நேரிட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதையடுத்து, ஆனந்தனின் குடும்பத்தினருக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர், ரூ.1 லட்சம் நிதியுதவியை வழங்கினார். இதனை ஆனந்தன் மனைவி சுசீலா பெற்றுக்கொண்டார்.