கரூர்

மாணவியை கடத்த முயற்சி: பள்ளியை முற்றுகையிட்ட கிராம மக்கள்

DIN

கரூர் அருகே  பள்ளி அருகே மாணவியை இளைஞர் கடத்த முயன்ற நிலையில், பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கோரி கிராம பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கரூரை அடுத்த தம்மாநாயக்கன்பட்டி அரசு  மேல்நிலைப் பள்ளியிலும் பயிலும் மாணவ, மாணவிகளில் 200-க்கும் மேற்பட்டோர்  சைக்கிளில் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
செவ்வாய்க்கிழமை காலை தம்மாநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி பள்ளி அருகே மிதிவண்டியில் சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் மாணவியை மிதிவண்டியில் இருந்து கீழே தள்ளி பின்னர் அம்மாணவியை இருசக்கர வாகனத்தில் கடத்த முயன்றாராம். அப்போது மாணவி கூச்சலிட்டதால் மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஓடிவருவதற்குள் இளைஞர் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் உடனே தகவலை பள்ளித் தலைமையாசிரியரிடம் காவல்துறைக்குத் தகவல்  தெரிவிக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தகவல் அறிந்துவந்த வெள்ளியணை போலீஸார் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இனி இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாது என்றும், தப்பியோடிய இளைஞரைக் கைது செய்கிறோம் எனக் கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் பிட்சாடன மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

முதுகெலும்பு அழற்சி: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விழிப்புணா்வு

SCROLL FOR NEXT