முகப்பு
கரூர்

முதல்வர் வருகையின்போது அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வலியுறுத்தல்

முதல்வர் வருகையின்போது அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

முதல்வர் வருகையின்போது அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அடிக்கடி நிகழும் வாகன விபத்துக்களை குறைக்கும் வகையில் சாலைகளில் பள்ளிகள்,  முக்கிய வணிகத்தலங்கள்,  மக்கள் அதிகளவில் புழங்கும் இடம் போன்ற பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன.  இந்த வேகத்தடைகளால் மக்கள் நெரிசல் மற்றும் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் வேகமாக வரும் வாகனங்களை அவற்றின் வேகத்தை குறைக்கும் வகையில் மாவட்டத்தில் குளித்தலை, லாலாப்பேட்டை, கரூர் நகர் பகுதிகள் என மொத்தம் 86 இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த 4-ஆம்தேதி கரூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வந்தபோது,
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து வேகத்தடைகளும் அகற்றப்பட்டன.  வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படாததால் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர் பழனியப்பன் கூறுகையில்,  முதல்வர் கரூருக்கு வந்து சென்று 15 நாட்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அவரது வருகைக்காக அகற்றப்பட்ட வேகத்தடைகள் இன்னும் அமைக்கப்படாதது வேதனைக்குரியது. குறிப்பாக,  பள்ளி, கல்லூரிகள் முன் அகற்றப்பட்ட வேகத்தடைகள் கூட மீண்டும் அமைக்கப்படவில்லை. எனவே மிகப்பெரிய அளவிலான விபத்துகளை சந்திக்கும் முன் மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் கொண்டு விரைந்து வேகத்தடைகளை மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →