காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம்: மார்க்சிஸ்ட் கட்சியினர் 29 பேர் கைது
குளித்தலையில் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட 29 பேரைக் கைது செய்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என
குளித்தலையில் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட 29 பேரைக் கைது செய்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் முத்துச்செல்வன் தலைமையில் குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் இறங்கி ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் குளித்தலை போலீஸார் வழக்குப் பதிந்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 29 பேரைக் கைது செய்தனர்.