முகப்பு
கரூர்

பிரதமருக்கு 10 லட்சம் அஞ்சல் அட்டைகள்  அனுப்பப்படும்: ஆசிரியர் கூட்டணி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, பிரதமருக்கு ஆசிரியர்கள் சார்பில் 10 லட்சம் அஞ்சல் அட்டை அனுப்பப்படும்  என்றார் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் செ. முத்துச்சாமி.

Updated On : 9 ஏப்ரல், 2018 at 8:30 AM
பகிர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, பிரதமருக்கு ஆசிரியர்கள் சார்பில் 10 லட்சம் அஞ்சல் அட்டை அனுப்பப்படும்  என்றார் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் செ. முத்துச்சாமி.
கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட மாநாடு மற்றும் ஆசிரியர்கள் எழுச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது: 
பிரதமர் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை மாநாட்டில் நிறைவேற்றி ஒரு வாரத்திற்குள் 10 லட்சம் அஞ்சல் அட்டைகளை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளோம். போராட்டம் குறித்து விரைவில் மாநிலக் குழுவில் முடிவெடுப்போம். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படவில்லை.  பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பக் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராடி வருகிறோம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அளித்த தேர்தல் வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.  சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக தமிழகத்தைச் சேர்ந்தவரை நியமிக்காதையை இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனே அவரை மாற்ற வேண்டும் என கல்வித்துறை சார்பில் வலியுறுத்துகிறோம் என்றார். பேட்டியின்போது, மாநில பொருளாளர் கேபி. ரக்ஷித், துணைத் தலைவர் எம்.ஏ. ராஜா,  மாநாட்டுத் தலைவர் வீ. சுந்தரகணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.