விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு ஊதியம் உயர்வு: அரசுக்கு அனைத்து ஆசிரியர் சங்கம் பாராட்டு
அரசு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு ஊதிய உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதற்கு அனைத்து ஆசிரியர் சங்க கூட்டமைப்பு தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
அரசு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு ஊதிய உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதற்கு அனைத்து ஆசிரியர் சங்க கூட்டமைப்பு தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
கரூரில் அனைத்து ஆசிரியர் சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலச் செயலாளர் நே. முருகேசன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் ஆ. ராம்குமார் வரவேற்றார். இதில், மார்ச் 2018 பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு தாள் ஒன்றுக்கு ரூ.6 முதல் ரூ.7.50 வரை உயர்த்தி வழங்கிய தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் , பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது, 2018 பொதுத்தேர்வின்போது பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களை மெட்ரிக். பள்ளிகளின் இணை இயக்குநர் உஷா ராணி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், ஆசிரியர் பயிற்றுநர் சங்க மாவட்டத் தலைவர் பிச்சைமுத்து, தமிழக ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத் தலைவர் தமிழழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.