18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் எந்த தீர்ப்பு வந்தாலும் ஆட்சி கவிழாது
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் எந்த தீர்ப்பு வந்தாலும் ஆட்சியைக் கவிழக்க முடியாது என்றார் மக்களவை துணைத்தலைவர் மு.தம்பிதுரை.
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் எந்த தீர்ப்பு வந்தாலும் ஆட்சியைக் கவிழக்க முடியாது என்றார் மக்களவை துணைத்தலைவர் மு.தம்பிதுரை.
கரூரில் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் ஞாயிற்றுக்கிழமை காலை கரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நீர் மோர் பந்தல் திறப்பு விழாவில் பங்கேற்று பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
காவிரி பிரச்னையைத் தீர்க்க திமுக தவறி விட்டது. காவிரி பிரச்னையில் தமிழக மக்களின் உரிமைக்காக, தமிழ் இனத்துக்காக அதிமுக போராடிக் கொண்டிருக்கிறது. திவாகரனைக் கட்சியில் சேர்ப்பது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பு குறித்து எங்களுக்கு கவலை இல்லை. எந்த தீர்ப்பு வந்தாலும், இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. இந்த ஆட்சி முழுமையாக 5 ஆண்டு காலம் நீடிக்கும்.
அரசியல்வாதிகளின் அழுத்தம் தொடர்ந்தால், கூட்டுறவு சங்கத்தேர்தலைப் புறக்கணிப்போம் ஊழியர் சங்கம் கூறியுள்ளதே எனக்கேட்டதற்கு, அது ஜனநாயக முறை கிடையாது. காவிரி பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பதற்காகத் தான் அழுத்தம் கொடுக்கிறோம். எனக்கு அழுத்தம் கொடுத்தால் தமிழக மக்களின் உரிமைக்காக தீவிரமாகப் போராடுவேன் என்றார்.
பேட்டியின்போது போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.