கரூர்

பிப.26, 27-இல் வெண்பன்றி வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்

DIN

கரூர் பண்டுதகாரன்புதூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மையத்தில் வரும் 26, 27-ஆம் தேதிகளில் வெண்பன்றி வளர்ப்பு இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக பண்டுதகாரன்புதூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் முனைவர் பெ.வசந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெண்பன்றி வளர்ப்பு இலவச பயிற்சி முகாம் வரும் 26, 27-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில், வெண்பன்றி இனங்கள், கொட்டை அமைப்பு, தீவன மேலாண்மை, பன்றிகளை தாக்கும் நோய்கள், அவற்றை தடுக்கும் வழிமுறைகள், விற்பனை உத்திகள், பண்ணைப் பொருளாதாரம் ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படும். இதில் பங்கேற்க விரும்புவோர் மையத்துக்கு பயிற்சி நடைபெறும் நாளில் காலை 10.30 மணிக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT