முகப்பு
கரூர்

அனுமதியின்றி மது விற்ற 5 பேர் கைது

குளித்தலை சுற்று வட்டாரப் பகுதிகளில் அனுமதியின்றி மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

குளித்தலை சுற்று வட்டாரப் பகுதிகளில் அனுமதியின்றி மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
குளித்தலை சுற்று வட்டாரப் பகுதிகளில் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் அனுமதியின்றி மதுபானங்கள் விற்கப்படுவதாக வந்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில்  மது விற்ற குமாரமங்கலம் தங்கதுரை (41), இரணியமங்கலம் வளையப்பட்டி  சேகர் (60), வையாபுரி (65), சிவாயம் ஈச்சம்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் (35), வைகைநல்லூர் கீழக்குட்டப்பட்டி கணேசன் (60) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →