முகப்பு
கரூர்

சாமானிய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அமராவதி ஆற்றில் சாயக்கழிவு கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காத மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தைக் கண்டித்து கரூரில் சாமானிய மக்கள் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

அமராவதி ஆற்றில் சாயக்கழிவு கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்காத மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தைக் கண்டித்து கரூரில் சாமானிய மக்கள் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கரூர் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள சாயப்பட்டறைகள் சட்ட விரோதமாக சாயக்கழிவு நீரை வெளியேற்றி வருவதாகவும்,  இதைத் தடுப்பதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்காமல்  இருப்பதாகவும் கூறி  கரூர் ராயனூர் நான்குச்சாலை பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாவட்டச் செயலர் என். சண்முகம்  தலைமை வகித்தார். ஒன்றியப் பொறுப்பாளர்கள் கிருஷ்ணராயபுரம் வி.கே.  ஆறுமுகம், தாந்தோனி எம். முத்துவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பொதுச் செயலர் ப. குணசேகரன் கோரிக்கைகளை வலியுறுத்தினார். கரூர் மாவட்ட சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் கே. ராமசாமி,  அமராவதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ம. தென்னரசு, ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலர் ரா. முல்லையரசு உள்ளிட்டோர் பேசினர்.  மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெ. காளிமுத்து வரவேற்றார். ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →