முகப்பு
கரூர்

அரசு மதுக்கடை தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த பொறியியல் மாணவர்கள் 2 பேர் கைது

அரசு மதுக்கடை தொழிலாளியிடம் பணம் பறித்த பொறியியல் மாணவர்கள் இருவரைப் போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 29 மார்ச், 2018 at 7:00 AM
பகிர்:

அரசு மதுக்கடை தொழிலாளியிடம் பணம் பறித்த பொறியியல் மாணவர்கள் இருவரைப் போலீஸார் கைது செய்தனர்.
கரூர் வடக்குபிரதட்சணம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ரவி (44).  இவர், கரூர் கொளந்தானூரில் உள்ள அரசு மதுபானக் கடையில் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இக்கடைக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த, கரூர் கோட்டையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த துரைசாமி மகன் மதன்குமார்(20),  கரூர் ராமகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த கணபதி மகன் விக்னேஷ்(21) ஆகியோர் ரவியிடம் கத்தியைக் காட்டி ரூ.500 பணம் பறித்தார்களாம். 
புகாரின் பேரில், பசுபதிபாளையம் போலீஸார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். 
விசாரணையில், மதன்குமார் கரூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டும், விக்னேஷ் கோவையில் உள்ள பொறியியில் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.