முகப்பு
கரூர்

இருசக்கர வாகனத்தில் வந்து பெண்ணிடம் ஆறரை பவுன் செயின் பறிப்பு

கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே பெண் கட்டடத் தொழிலாளியிடம் ஆறரை பவுன் செயினைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On : 15 மே, 2018 at 4:18 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே பெண் கட்டடத் தொழிலாளியிடம் ஆறரை பவுன் செயினைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
புன்னம்சத்திரம் அருகே உள்ள ஆலாம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராசம்மாள்(48). இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு வேலை முடிந்து புன்னம் அருகே உள்ள குட்டக்கடை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கு வைத்திருந்த மொபெட்டில் வீட்டுக்குச் சென்றபோது பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஆறரை பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.