கரூரில் ரூ.10 லட்சம் கேட்டு தனியார் ஊழியர் கடத்தல்
கரூரில் ரூ.10 லட்சம் கேட்டு தனியார் நிறுவன ஊழியரை கடத்திச் சென்ற மர்ம நபர்களைப் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கரூரில் ரூ.10 லட்சம் கேட்டு தனியார் நிறுவன ஊழியரை கடத்திச் சென்ற மர்ம நபர்களைப் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்த ரத்தினம் மகன் ருத்ரசாமி(29). இவர் கோவையிலுள்ள தனியார் நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கரூர் வெங்கமேட்டில் உள்ள தனது வீட்டுக்கு கடந்த புதன்கிழமை (மே 16) வந்தார். அன்றிரவு வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்தபோது வேனில் வந்த அடையாளம் தெரியாத 5 மர்மநபர்கள் திடீரென ருத்ரசாமியை வேனுக்குள் இழுத்துப் போட்டு கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவரது தந்தைக்கு செல்லிடப்பேசியில் ரூ.10 லட்சம் ரொக்கம் கேட்டு மர்ம நபர்கள் போனைத் துண்டித்து விட்டனராம். இதுதொடர்பாக ரத்தினம் சனிக்கிழமை இரவு வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டிகே.ராஜசேகரன் உத்தரவின்பேரில் வெங்கமேடு காவல் ஆய்வாளர் செந்தில்குமரன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.